தமிழகத்தில் முழு ஊரடங்கின்போது சந்தைக்கு, கடைகளுக்குப் பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றால் பறிமுதல் செய்யும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்

0 132996
தமிழகத்தில் முழு ஊரடங்கின்போது சந்தைக்கு, கடைகளுக்குப் பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றால் பறிமுதல் செய்யும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்

முழு ஊரடங்கின்போது சந்தைக்கு, கடைகளுக்குப் பொருட்கள் வாங்க இருசக்கர வாகனத்தில் சென்றால் அதைப் பறிமுதல் செய்யும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் நண்பகல் 12 மணி வரை மளிகைக் கடை, காய்கறிக் கடை, இறைச்சிக்கடை ஆகியன திறக்கவும் அவற்றில் பொருட்களை வாங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்றே பொருட்களை வாங்கிச் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கும் சந்தைக்கும் இருசக்கர வாகனத்தில் சென்றால் அதைப் பறிமுதல் செய்யும்படியும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனை, மருந்தகம், ஊடகம் ஆகியவற்றில் பணியாற்றுவோரும், மின்சாரம், உணவுப்பொருள் வழங்கல் உள்ளிட்ட இன்றியமையாப் பணிக்குச் செல்வோரும் மாவட்ட ஆட்சியரகத்தில் அதற்கான பாஸ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments