முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவையின் முதல் கூட்டம்

0 2311

புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி அமைந்தபின் அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது, நோயாளிகளின் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்துக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிப்பது என முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments