தமிழகத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டுப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக நேற்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

0 1195
தமிழகத்தில் முழு ஊரடங்கை முன்னிட்டுப் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக நேற்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னையில் இருந்து பிற நகரங்களுக்கு நேற்று முதல் இன்று காலை 9 மணி வரை மொத்தம் மூவாயிரத்து 325 பேருந்துகள் இயக்கப்பட்டு, அவற்றில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை முதல் இருவாரங்களுக்கு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

அதை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிட ஏதுவாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் நேற்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை 9 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து பிற நகரங்களுக்கு மூவாயிரத்து 325 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இன்றும் பொதுமக்களின் வசதிக்காகச் சென்னையிலிருந்து நாலாயிரத்து 816 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments