மதுரை - மக்கள் தான் முக்கியம்... நிறைமாத கர்ப்பிணி மருத்துவருக்கு நேர்ந்த சோகம்..!

0 13251
மக்கள் தான் முக்கியம்... கொரோனா தடுப்பில் ஈடுப்பட்டு வந்த நிறைமாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்..!

துரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மருத்துவரும், அவர் வயிற்றில் இருந்த சிசுவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி அனுப்பானடி நகர்ப்புற ஆரம்ப சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்த 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா. கர்ப்பிணியாக இருந்த நிலையிலும் 31வயதே ஆன இளம் மருத்துவரான சண்முகபிரியா தொடர்ந்து கொரோனா தடுப்பில் மக்கள் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுவந்தார்.

இந்நிலையில் அவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்,. இந்த நிலையில் நுரையீரலில், 90 சதவிகிதம் தொற்று ஏற்பட்டதால், சண்முகபிரியா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்,.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னைக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்று அதிகமாக பரவிவருகின்றது. நாள்தோறும் 900 முதல் ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். 40 முதல் 50 பேர் வரை உயிரிழக்கின்றனர் ஒரே நாளில் மதுரையில் உச்சமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது,.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments