தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் - மு.க.ஸ்டாலின்

0 2280
தமிழகத்தில் நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும் - மு.க.ஸ்டாலின்

மிழகத்தைத் தரணியிலேயே தலைசிறந்த வாழ்விடமாக மீண்டும் மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே தான் எடுத்திருக்கின்ற சூளுரை என முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில், தமிழகத்திற்கு அருந்தொண்டாற்றுகின்ற முதல் வரிசைப் பணியாளனாக - முழு நேர ஊழியனாக தன்னைக் கருதிக் கொள்கிறேனே தவிர, முதலமைச்சராகக் கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் பற்றி தான் வளர்த்துக் கொண்டிருக்கும் கனவுகளை ஒன்று விடாமல் நிறைவேற்றுகிற அரிய வாய்ப்பு தனக்குக் கிடைத்திருப்பதாக எண்ணிப் பெருமிதம் அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பதவியேற்றிருக்கும் தருணம், கடுமையான சூழலைக் கொண்டதாக அமைந்திருப்பது காலம் நமக்கு விடுத்திருக்கும் சவால் என்றே கருதுதுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

எவ்வித பாகுபாடும் இன்றி, அனைத்து தரப்பினரையும் அரவணைத்து, நேர்மையான, தூய்மையான, வெளிப்படையான நிர்வாகம் நடக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments