கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு - மத்திய நிதியமைச்சகம்

0 1934
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழகத்திற்கு ரூ.533 கோடி ஒதுக்கீடு - மத்திய நிதியமைச்சகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்குவதற்காக 25 மாநிலங்களுக்கு எட்டாயிரத்து 923 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதிக அளவாக உத்தரப் பிரதேசத்துக்கு ஆயிரத்து 441 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 533 கோடியே 20 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நிதியாண்டின் முதல் தவணையாக இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி மன்றம் என மூன்றடுக்குகளாக உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்தத் தொகை மானியமாக வழங்கப்படும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments