சிறைகளில் கொரோனா பரவி வருவதால் அவசியமில்லாமல் யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

0 1326
சிறைகளில் கொரோனா பரவி வருவதால் அவசியமில்லாமல் யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாம் - உச்சநீதிமன்றம் உத்தரவு

சிறைகளில் கொரோனா பரவி வருவதால் அவசியமில்லாமல் யாரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் சுகாதாரமற்ற சூழல் நிலவிவருவதுடன் கொரோனா பெரிய அளவில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஏழாண்டு சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய வழக்குகள் தவிர இதர சிறிய வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சிறைக்கைதிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு பரோல் வழங்கப்பட்ட கைதிகளுக்கு மேலும் 90 நாட்கள் பரோலில் செல்ல பரிசீலிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments