பொலிவியா - சிலி இடையில் 16 ஆண்டுகளுக்கு பின் ரயில் சேவை தொடக்கம்

0 1468
பொலிவியா - சிலி இடையில் 16 ஆண்டுகளுக்கு பின் ரயில் சேவை தொடக்கம்

பொலிவியாவில் இருந்து 16 ஆண்டுகளுக்கு பின் சிலி நாட்டிற்கு ரயில் இயக்கப்பட்டது. இயற்கை பேரிடர் காரணமாக சிலி மற்றும் பொலிவியா நாடுகளுக்கு இடையிலான ரயில் சேவை கடந்த 2003 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பின் இருநாடுகளுக்கும் இடையில் சுமார் 616 கிலோ மீட்டர் தூரம் தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டு சோதனை ரயில் ஒட்டம் நடந்தது.

பொலியாவில் இருந்து கிளம்பிய 16 பெட்டிகள் கொண்ட ரயில் 410 டன் எடை கொண்ட இரும்பு காயில்களை சிலி நாட்டிற்கு கொண்டு சென்றது.

முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றி அடைந்த நிலையில் அடுத்தக்கட்டமாக சிலியில் இருந்து 400 டன் சோயாபீன்கள் ஏற்றிச் செல்ல முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments