ஏரியின் மேல்பகுதியில் கட்டப்பட்டதால் மூழ்கி வரும் மெக்ஸிகோ சிட்டி : ஆண்டுக்கு 20 அங்குலம் வரை மூழ்குவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

0 2827
ஏரியின் மேல்பகுதியில் கட்டப்பட்டதால் மூழ்கி வரும் மெக்ஸிகோ சிட்டி : ஆண்டுக்கு 20 அங்குலம் வரை மூழ்குவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

மெக்ஸிகோ நாட்டின் தலைநகரமான மெக்ஸிகோ சிட்டி ஆண்டுக்கு 20 அங்குலம் வரை பூமிக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த நகரத்தின் கீழ் பகுதியில் வறண்ட நதிப் படுகைகள் இருப்பதால் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு பூமிக்குள் ஆழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் டெக்ஸ்கோகோ ஏரி இருந்த இடத்தில் இந்த நகரம் கட்டமைக்கப்பட்டது. தற்போது முழு நகரமும் களிமண்ணின் மேல் கட்டப்பட்டுள்ளதால் மெதுவாக உள்வாங்கிக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த 1900ம் ஆண்டு மெக்ஸிகோ சிட்டி மூன்றரை அங்குலம் பூமிக்குள் உள்வாங்கிச் சென்றதை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.

நகரத்தில் உள்ள நீர் நிலைகள் உயர்த்திக் கட்டப்படாவிட்டால் அடுத்த 150 ஆண்டுகளில் மெக்சிகோ சிட்டி கிட்டத்தட்ட 100 அடி அதிகமாக மூழ்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments