தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது மத்திய அரசு

0 1832
தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது மத்திய அரசு

மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 மெட்ரிக் டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

அப்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரினார்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டிய முதலமைச்சர், தமிழகத்திற்கான ஆக்ஸிஜன் ஒதுக்கீட்டை 500 டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 220 மெட்ரிக் டன்னிலிருந்து 419 மெட்ரிக் டன்னாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளைத் தொடர்ந்து அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதிகப் பாதிப்பில்லாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments