ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்-55 மாணவிகள் உயிரிழப்பு, 150 பேர் படுகாயம்

0 11689
ஆப்கானிஸ்தானில் பள்ளி மாணவிகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்-55 மாணவிகள் உயிரிழப்பு, 150 பேர் படுகாயம்

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 55 மாணவிகள் கொல்லப்பட்டனர்.

தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள ஷியா இனத்தவர் அதிகம் உள்ள தஷ்த் இ பார்ஷி என்ற இடத்தில் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் அருகில் இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் மாணவிகளே என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்பில் சிக்கிய 150 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஏராளமானோரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments