ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

0 1556
பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 27 பேருடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 27 பேருடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

பொருளாதார ரீதியான வளர்ச்சியை முன்வைக்கும் வர்த்தக ரீதியான ஒத்துழைப்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் இந்தியாவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளன. மின்சாரம், போக்குவரத்து, டிஜிட்டல் வர்த்தகம், மக்களுக்கு இடையிலான பரிவர்த்தனைகள் என பல்வேறு துறைகளில் இந்த ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்படுகிறது.

இக்கூட்டம் குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவின் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பில் இருந்து விடுபட அமெரிக்கா, இங்கிலாந்து , ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முழு அளவில் ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் யதார்த்த நிலையை ஐரோப்பிய நாடுகள் புரிந்துக் கொண்டிருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments