அதிகரிக்கும் கொரோனா தொற்று: நாளை முதல் பொதுமுடக்கம் அமலாகிறது

0 7021
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதிவரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் நாளை முதல் 24-ம் தேதிவரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில், நாளை முதல் 24-ம் தேதிவரை 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்கவும் அனுமதி இல்லை. அதேசமயம், திருமணம், இறப்பு, நேர்முகத்தேர்வு உள்ளிட்டவற்றுக்கு செல்வோர் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ பதிவு முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள் இயங்காது.

தலைமைச் செயலகம், மருத்துவம், வருவாய், காவல் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை தவிர்த்து, மற்ற மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி நிறுவனங்கள் இயங்கவும் கோடை கால சிறப்பு முகாம்கள் நடத்தவும் விதிக்கப்பட்ட தடையும் வழக்கம்போல் தொடர்கிறது. முழு ஊரடங்கு நாட்களில், உணவு, மளிகை, காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் ஆகியவை ஆன்லைன் மூலம் விநியோகம் செய்யலாம்.

அதேநேரம் பால் விநியோகம், கொரியர் சர்வீஸ், பத்திரிகை விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள் இயங்க எந்த தடையும் இல்லை. மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் ஏ.சி. வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்படலாம். சாலையோர உணவகங்களுக்கு அனுமதி இல்லை. அதேசமயம், அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள நிலையில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு இன்று ரத்து செய்யப்படுவதாகவும், அனைத்து கடைகளும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments