மே 16 முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விற்கப்படும்..! புதிய விலைப் பட்டியல் வெளியீடு

0 3996
மே 16 முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து விற்கப்படும்..! புதிய விலைப் பட்டியல் வெளியீடு

மே 16ஆம் நாள் முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து விற்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், புதிய விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் மே 16 முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்துப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்குப் பழைய விலையில் இதுவரை விற்கப்பட்டுள்ள பால் அட்டைகளுக்கான வித்தியாசத் தொகை அடுத்த மாதம் பால் அட்டை விற்கும் போது ஈடு செய்யப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments