சென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ ... காக்கி பெண்களின் அழகான கொரோனா விழிப்புணர்வு நடனம்..!

0 43380
சென்னை சென்ட்ரலில் குக்கூ குக்கூ ... காக்கி பெண்களின் அழகான கொரோனா விழிப்புணர்வு நடனம்..!

சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலர்கள், நடனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். அழகிய முக பாவனைகளுடன் கொரோனாவின் கொடூர முகத்தை இனிய இசைக்கு ஏற்ப,அசத்தல் நடனம் மூலம் பெண் காவலர்கள் விளக்கிய காட்சி வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருவதால், தமிழ்நாட்டில் விழிப்புணர்வு பிரசாரம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அந்த வகையில், வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து சென்னை ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இணையத்தில் டிரண்ட் ஆன காக்கி உடையிலும் கருப்பு உடையிலும் குக்கூ....குக்கூ.. என்ற பாடலுக்கு, இளம் பெண் காவலர்கள் மிகவும் நேர்த்தியாக நடனம் ஆடினர்.

காக்கி உடையில் முகக் கவசம் அணிந்து பெண் காவலர்கள் நடனம் ஆட, இவர்களுக்கு பின்னால் கருப்பு உடையில் மற்றொரு பெண் காவலர் முகக் கவசம் அணியாமல் நடனத்தில் இணைந்தார். கொரோனா பிடியில்

சிக்குவது போல தத்ரூபமாக நடனம் ஆடிய கருப்பு உடை பெண் காவலர், வைரஸ் தொற்றில் இருந்துகாத்துக்கொள்ளும் தடுப்பு வழிமுறைகள் குறித்து அழகிய முக பாவனைகளுடன் தத்ரூபமாக பொதுமக்களுக்கு விளக்கினார்.

பொது இடங்களில் கூட்டம் சேருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்திய ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர்கள், கட்டாயம் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், கிருமி நாசினி மூலம் கைகளை அவ்வப்போது சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கொரோனாவைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவை இல்லை என கூறியுள்ள மருத்துவ நிபுணர்கள், விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருந்தால், நிச்சயம் கொரோனாவின் பிடியில் சிக்காமல் பாதுகாத்து கொள்ள முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments