ஆக்சிஜன் இருப்பு மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்த 12 உறுப்பினர் நடவடிக்கை குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

0 1525
ஆக்சிஜன் இருப்பு மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்த 12 உறுப்பினர் நடவடிக்கை குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்

நாடு முழுவதும் மருத்துவ ஆக்சிஜன் இருப்பு அளவை மதிப்பீடு செய்வதுடன் அதன் விநியோகத்தை அறிவியல்பூர்வமாக, அனைவருக்கும் சரிசமமாக பங்கிட்டு கொடுக்க 12 உறுப்பினர் தேசிய நடவடிக்கை குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் தங்களுக்கு இருக்கும் அறிவியல் மற்றும் சிறப்பு நிபுணத்துவம் வாயிலாக ஆக்சிஜன் வழங்கலுக்கு தேவையான நடவடிக்கைளை பரிந்துரைப்பார்கள்.

மேற்கு வங்க மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாபாதோஷ் பிஸ்வாஸ் தலைமையிலான இந்த குழுவில் வேலூர் கிறித்தவ மருத்துவ கல்லூரி, பெங்களூரு நாராயணா மருத்துவமனை, டெல்லி சர் கங்காராம் மருத்துவமனை உள்ளிட்டவற்றின் முன்னணி மருத்துவ நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments