தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று; 241பேர் உயிரிழப்பு

0 1834
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று; 241பேர் உயிரிழப்பு

மிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக 27 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 241 பேர், கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 27,397 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது . பெருந் தொற்று பாதிப்பிலிருந்து, 23,110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் 72 பேர் உள்பட மாநிலம் முழுவதும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 241 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

சென்னையில் புதிதாக 6846 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் 2458 பேரும், கோவையில் 2117 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் - 1284 , மதுரை - 1217 .காஞ்சிபுரம் - 906 ,தஞ்சாவூர் - 857 , தூத்துக்குடி - 853, திருச்சி - 820, ஈரோடு - 779, திருநெல்வேலி - 674, திருப்பூர் - 655, வேலூர் - 574, பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 950 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,39,401 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments