தனியார் ஆய்வக மாதிரிகளை அரசு மருத்துவமனை உபகரணங்களை பயன்படுத்தி கொரோனா பரிசோதனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

0 2010
தனியார் ஆய்வக மாதிரிகளை அரசு மருத்துவமனை உபகரணங்களை பயன்படுத்தி கொரோனா பரிசோதனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

பெங்களூருவில் தனியார் ஆய்வகங்களில் இருந்து மாதிரிகளை பெற்று, கொரோனா பரிசோதனை செய்து கொடுத்த அரசு மருத்துவமனை ஆய்வக ஊழியர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

எலகங்காவில் உள்ள அரசு மருத்துவமனையில், தனியார் ஆய்வகங்களிடமிருந்து மாதிரியை பெற்று பரிசோதனை நடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து அங்கு சோதனையில் ஈடுபட்ட போலீசார், முறைகேட்டில் தொடர்புடைய மருத்துவமனை ஆய்வக ஊழியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனையின் நிர்வாகியை கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஒரு மாதிரிக்கு 100 ரூபாய் வீதம், தனியார் ஆய்வகங்களிடம் இருந்து தினமும் 40 மாதிரிகளை பெற்று அரசு மருத்துவமனை உபகரணங்களை பயன்படுத்தி சோதனை செய்து கொடுத்தது தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments