டிஆர்டிஓ நிறுவனம் உருவாக்கிய வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் கொரோனா மருந்துக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அவசரகால அனுமதி..!

0 2991
டிஆர்டிஓ நிறுவனம் உருவாக்கிய வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் கொரோனா மருந்துக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அவசரகால அனுமதி..!

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் உருவாக்கிய வாய் வழியாக எடுத்துக் கொள்ளும் கொரோனா மருந்துக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அவசரகால அனுமதியை வழங்கி உள்ளார்.

2-டிஆக்சி -டி-குளுகோஸ் என்ற இந்த மருந்து, கொரோனா நோயாளிகள் விரைந்து குணமாகவும், ஆக்சிஜனை நம்பி இருக்கும் நிலையை குறைக்கவும் உதவுவதாக அதன் மூன்றாம் கட்ட கிளினிகல் சோதனைகளில் தெரிய வந்துள்ளதை தொடர்ந்து அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள தயாராவோம் என்ற பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று டிஆர்டிஓ-வின் கீழ் உள்ள இன்மாஸ் ஆய்வக விஞ்ஞானிகள், ஐதராபாத்தில் உள்ள CCMB விஞ்ஞானிகளுடன் இணைந்து இந்த மருந்துக்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தனர்.

11 மருத்துவமனைகளில் 110 நோயாளிகளிடம் 2 ஆம் கட்ட கிளினிகல் சோதனையும், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 19 மருத்துவமனைகளில் 220 நோயாளிகளிடம் 3 ஆம் கட்ட கிளினிகல் சோதனையும் நடத்தப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments