ஆக்சிஜன் ஒதுக்கீட்டை உயர்த்த... பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை..!

0 2092

மிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 டன்னாக உயர்த்தி வழங்கும்படி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். அப்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரினார்.

தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்தக் கோரிக்கையை உடனடியாகப் பரிசீலிப்பதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளைத் தொடர்ந்து அதிக அளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதிகப் பாதிப்பில்லாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments