”அனைத்துச் சாலைகளிலும் தெருக்களிலும் கோவில் ஊர்வலம் செல்ல உரிமை உண்டு” -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 17361
”அனைத்துச் சாலைகளிலும் தெருக்களிலும் கோவில் ஊர்வலம் செல்ல உரிமை உண்டு” -சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

னைத்துச் சாலைகளிலும், தெருக்களிலும் கோவில் ஊர்வலங்களை அனுமதிக்க வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு ஒன்றில், கோவில் விழாக்களை ஒட்டி அனைத்துச் சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, ஊர்வலத்துக்குத் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத சகிப்பின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல என்றும், மாற்று மதத்தவரின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் கோவில் மற்றும் மத ஊர்வலங்களை நடத்த அனைத்துப் பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments