உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்திற்கான பணிகள் தொடக்கம்..! முதற்கட்டமாக 6 இலட்சம் புகார்களை கணினியில் ஏற்றும் பணி துவக்கம்

0 4799
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்திற்கான பணிகள் தொடக்கம்..! முதற்கட்டமாக 6 இலட்சம் புகார்களை கணினியில் ஏற்றும் பணி துவக்கம்

ங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

தேர்தலின் போது உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காண்பதாக மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார்‍.

பதவியேற்றவுடன் அவற்றிற்கு தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது.இந்நிலையில் இத்திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

முதற்கட்டமாக 6 இலட்சம் புகார்களை கணினியில் ஏற்றும் பணி நடைபெற்று வருவதாக திட்டத்தை செயல்படுத்தும் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்‍.

புகார்கள் துறை ரீதியாக பிரிக்கப்பட்டு மாவட்டம் தோறும் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்‍.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments