மதுரை மருத்துவகல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடக்கம்..!

0 996
மதுரை மருத்துவகல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடக்கம்..!

சென்னையை தொடர்ந்து, மதுரை, கோவையிலும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ரெம்டெசிவிரை மக்களே நேரடியாக பெற்றுக் கொள்ள சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டது.

அங்கு மருந்து வாங்க கூட்டம் அலைமோதிய நிலையில், தற்போது, மதுரை, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவிர் ஒரு டோஸ் விலை 1568ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவரின் பரிந்துரைக் கடிதம், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை சான்று, சி.டி.ஸ்கேன் சான்று உள்ளிட்டவற்றை காண்பித்து ரெம்டெசிவிர் மருந்தை பெற்றுச் செல்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments