தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

0 2882
தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

மிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து, முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, 25 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், வரும் திங்கள்கிழமை முதல் முழு ஊரடங்கு இரு வாரங்களுக்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழல் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் தொலைபேசியில் கேட்டறிந்தார்‍. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

கூடுதல் மருத்துவ உதவிகளை அளிக்குமாறு பிரதமருக்கு,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போது கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments