சட்டப்பேரவைக் கூட்டம்.. மே 11 அன்று நடைபெறும்..!

0 1663
சட்டப்பேரவைக் கூட்டம்.. மே 11 அன்று நடைபெறும்..!

புதிதாக அமைந்துள்ள தமிழகச் சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் மே 11 அன்று கலைவாணர் அரங்கில் கூடுகிறது.

சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வரும்போது தேர்தல் சான்றிதழைத் தவறாமல் கொண்டுவர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்கள் மே 12 புதன் முற்பகல் 10 மணிக்கு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments