”பேருந்துகளில் திருநங்கையரும் இலவசமாக பயணிப்பது குறித்து பரிசீலித்து முடிவு” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2797
”பேருந்துகளில் திருநங்கையரும் இலவசமாக பயணிப்பது குறித்து பரிசீலித்து முடிவு” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண்களை போலவே திருநங்கையரும் அரசு நகர பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்பது குறித்து பரிசீலித்து உரிய முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதுமுள்ள நகர பேருந்துகளில் பெண்களை போலவே திருநங்கைகளும் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்க வேண்டுமென ட்விட்டரில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் நலன் - உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது திமுக அரசின் வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments