தலைமைச்செயலக முகப்பில் இருந்த புகைப்படங்கள் அகற்றம்..! அரசு சார்ந்த பணிகளுக்கான இடத்தில் கட்சி சார்ந்த படங்கள் வேண்டாம் -முதலமைச்சர் ஸ்டாலின்

0 7350

சென்னை தலைமைச்செயலக முகப்பில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படங்கள் அகற்றப்பட்டன.

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றதையடுத்து தலைமை செயலகம் முன் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு உருவப்படம் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவப் படங்கள் வைக்கப்பட்டன.

இதனை பார்த்த ஸ்டாலின், அரசு சார்ந்த பணிகளுக்கான இடத்தில் கட்சி சார்ந்த படங்களை வைக்க வேண்டாம் எனவும், அவற்றை உடனடியாக அகற்றம்படியும் உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments