கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு

0 1000
கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் ஒத்திவைப்பு

மிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மே 28, 29, 30 ஆகிய நாட்களில் நடைபெற இருந்த குரூப் 1 முதன்மைத் தேர்வு, ஜூன் ஆறாம் நாள் நடைபெற இருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளுக்கான தேர்வு, ஜூன் ஐந்தாம் நாள் நடைபெற இருந்த ராணுவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு ஆகியவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதே நேரத்தில் ராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் மே 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments