தமிழகத்தில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி திறந்திருக்க அனுமதி

0 5433
தமிழகத்தில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி திறந்திருக்க அனுமதி

மிழகத்தில் திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் வழக்கம்போல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, வரும் 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இன்றும் நாளையும் அனைத்து கடைகளும் எந்தவித கட்டுப்பாடும் இன்றி காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ள ஏதுவாக அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள்தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெற வேண்டும் எனவும், அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments