கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவி - காப்பாற்ற முயன்ற கணவனும் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்

0 35532
கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவி - காப்பாற்ற முயன்ற கணவனும் நீரில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த பெருமாள்பட்டியில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெருமாள்பட்டியை சேர்ந்த சசிக்குமாருக்கும் அவரது மனைவி அழகுராணிக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் கணவரை பிரிந்து அழகுராணி தாய் வீட்டில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் தாய் வீட்டிற்கும் வந்து சசிக்குமார் சண்டையிட்டதாகவும் அதனால் மனஉளச்சலுக்கு ஆளாகி அழகுராணி கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

கண் எதிரே கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற சசிக்குமாரும் கிணற்றில் குதித்த நிலையில் நீச்சல் தெரிய காரணத்தால் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments