ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 1600 குழந்தைகள் உயிரிழப்பு

0 1426
ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 1600 குழந்தைகள் உயிரிழப்பு

ப்கானிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 40 விழுக்காடு அளவிற்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த 2016ம் ஆண்டுக்கும் 2020ம் ஆண்டுக்கும் இடையே பொதுமக்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஆயிரத்து 977 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் ஆயிரத்து 600 பேர் குழந்தைகள் எனவும் சேவ் தி சில்ட்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஐந்து குழந்தைகள் வரை கொல்லப்படுவதாகவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments