சீனாவின் முதல் காலாண்டின் நடப்பு கணக்கில் 75.1 பில்லியன் டாலர் உபரி வருவாய் கிடைத்து உள்ளதாக தகவல்

0 4813
சீனாவின் முதல் காலாண்டின் நடப்பு கணக்கில் 75.1 பில்லியன் டாலர் உபரி வருவாய் கிடைத்து உள்ளதாக தகவல்

சீன நிதி ஆண்டின் முதல் காலாண்டில் நடப்பு கணக்கில் 75 புள்ளி 1 பில்லியன் அமெரிக்க டாலர் உபரி வருவாய் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிதமாக கணக்கிடப்பட்டு உள்ளதாக சீன நிதியியல் வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதேபோல் முதலாம் காலாண்டின் முடிவில் சீன பொருட்களின் வர்த்தகம் 118 புள்ளி 7 பில்லியன் டாலரும், அந்நிய முதலீடு மூலம் 70 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உபரி வருவாய் கிடைத்து உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதேநேரம் பொருளாதார சேவைத் துறை 22 புள்ளி 3 பில்லியன் அமெரிக்க டாலர் பற்றாக்குறையை சந்தித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நிலையில் சீனாவில் மட்டும் ஒரு காலாண்டு நிதி வருவாய் பிரம்மாண்ட வளர்ச்சி கண்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments