டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்கி வருவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

0 1091
டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்கி வருவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை

க்சிஜன் கிடைக்காமல் ஒரு உயிர் கூட பிரியக்கூடாது என்று கவலை தெரிவித்துள்ள டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், தலைநகரில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கோவிட் நோயின் பாதிப்புகள் குறித்து உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், அடுத்த 3 மாதங்களுக்குள் தகுதி பெற்ற அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

மாவட்ட ஆட்சியாளர்கள் தடுப்பூசி மையங்களில் திடீர் சோதனை நடத்தும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

விரைவில் டெல்லியில் 48 ஆக்சிஜன் ஆலைகள் அமைய இருப்பதாகவும் அதன் மூலம் 40 டன்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments