கோவாவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு

0 2975
கோவாவில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவினை மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பிறப்பித்துள்ளார்.

கோவாவில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவினை மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் பிறப்பித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த கோவா அரசு நாளை முதல் 15 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது.

மாநிலத்தில் 25 சதவிகித மக்கள் உண்மையில் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதில்லை என்று கூறியிருக்கும் முதலமைச்சர் பிரமோம் சாவந்த், ஆனால் மக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைக் கட்டுப்படுத்தவே ஊரடங்கு பிறப்பித்துள்ளதாகக் கூறினார்.

கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்று அல்லது தடுப்பூசி போட்ட சான்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments