நாளை மறுநாள் முதல் மே 24 வரை முழு ஊரடங்கு - கர்நாடக அரசு

0 4902
நாளை மறுநாள் முதல் மே 24 வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை மறுநாள் முதல் மே 24 வரை முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

அம்மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து சுமார் நான்கரை லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனையடுத்து முதலமைச்சர் எடியூரப்பா 10ம் தேதியில் இருந்து 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அறிவித்துள்ளார்.

அனைத்து உணவகங்கள், மதுக்கடைகள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும். திருமணத்திற்கு 50 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காய்கறி மளிகை இறைச்சிக் கடைகளை காலை 6 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments