இந்தியாவுக்கு இக்கட்டான நேரத்தில் நண்பனாக அமெரிக்கா துணை இருக்கும்- கமலா ஹாரிஸ்

0 1976
இந்தியாவுக்கு நெருக்கடி நேரத்தில் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று அந்நாட்டின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு நெருக்கடி நேரத்தில் உதவுவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கிறது என்று அந்நாட்டின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

கோவிட் நோய்க்கு எதிராக இந்தியா போராடி வரும் இக்கட்டான நிலையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசிய போது தமது ஆதரவைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து மேலும் பல உதவிகள் இந்தியாவுக்குத் தொடர இருப்பதாக கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

இதுவரை 1700 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளும் ஆயிரத்து 100 சிலிண்டர்களையும் அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. இது மட்டுமின்றி ஆஸ்ட்ரா ஜெனிகாவின் 2 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கக்கூடிய மருந்துகளை இந்தியாவுக்கு வழங்கவும் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments