இக்கட்டான சூழ்நிலையை அனைவரது கூட்டு முயற்சியால் மட்டுமே வெல்லமுடியும் - முதலமைச்சர்

0 7360
அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்துகள், ஆக்சிஜன் போன்றவை தங்குதடையின்றி கிடைத்திடத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்துகள், ஆக்சிஜன் போன்றவை தங்குதடையின்றி கிடைத்திடத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், உயிரிழப்புகளை குறைப்பது பற்றியும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை வசதிகள் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், கொரோனா தடுப்புப் பணியில், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை இணைந்து பணியாற்ற வேண்டுமென அவர் அழைப்பு விடுத்தார். பொய்யுரை - புகழுரை கேட்க தாம் இங்கு வரவில்லை என குறிப்பிட்ட முதலமைச்சர், உள்ளதை உள்ளபடி எதிர்கொண்டு பொதுமக்களை சந்தித்து, அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அனைத்து மருத்துவமனைகளிலும், மருந்துகள், ஆக்சிஜன் போன்றவை தங்குதடையின்றி தொடர்ந்து கிடைத்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி போடுவதில் மருத்துவத் துறையினர் மேலும் முனைப்புடன் செயல்படவேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
அங்கு 850 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 364 படுக்கைகள் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட படுக்கைகள் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments