தமிழகத்திற்கு 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, அடுத்த 4 நாட்களுக்குள் வழங்க வேண்டும்-பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

0 3309
தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை 4 நாட்களுக்குள் வழங்குமாறு, பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தின் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க 40 மெட்ரிக் டன் ஆக்சிஜனை 4 நாட்களுக்குள் வழங்குமாறு, பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், பிரதமருக்கு எழுதியுள்ள முதல் கடிதத்தில், தமிழகத்திற்கு உடனடியாக 20 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆக்சிஜன் இல்லாமல் 13 கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததை முதலமைச்சர் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தமிழகத்திற்கு மத்திய அரசு 220 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மட்டுமே ஒதுக்கீடு
செய்து உள்ளதாகவும் , தமிழகத்தின் தேவை 440 மெட்ரிக் டன்னில் இருந்து 840 மெட்ரிக் டன் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

எனவே,நெருக்கடியான இந்த சூழலில், தமிழகத்தில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு கவனம் செலுத்தி உதவுமாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments