தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,465பேருக்கு கொரோனா உறுதி; 197 பேர் உயிரிழப்பு

0 2720
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 26,465பேருக்கு கொரோனா உறுதி; 197 பேர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் அச்சம் தரும் வகையில் புதிய உச்சமாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டி உள்ளது. ஒரே நாளில் மட்டும் கொரோனாவுக்கு 197 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாட்டின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 26,465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது . பெருந் தொற்று பாதிப்பிலிருந்து, 22,381பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

17 வயது நெல்லை இளைஞர், 21 வயது நெல்லை இளம்பெண், 23 வயது சென்னை இளைஞர், 26 வயது தென்காசி இளம்பெண், 93 வயது சென்னை முதியவர் உள்பட மாநிலம் முழுவதும் ஒரே நாளில் கொரோனாவுக்கு 197 பேர் பலியானார்கள்.

சென்னையில் மட்டும் 60 பேர் வைரஸ் தொற்றுக்கு பலியாக, புதிதாக 6738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. செங்கல்பட்டில் 2154 பேரும், கோவையில் 2101 பேரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

திருவள்ளூர் - 1384 , காஞ்சிபுரம் - 857 ,தூத்துக்குடி - 855, திருச்சி - 784, திருநெல்வேலி - 673, ஈரோடு - 639, வேலூர் - 582, திருப்பூர் - 552 மற்றும் கிருஷ்ணகிரியில் 500 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒரே நாளில், 12 வயதுக்குட்பட்ட 919 சிறுவர், சிறுமிகள் புதிதாக கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் 1,35,355 பேர், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments