பெல்ஜியத்தில் பிரான்ஸ் எல்லைக் கல்லை ஏழரை அடி நகர்த்திவைத்த விவசாயி- பூதாகரமான எல்லை பிரச்னை..!

0 13125
பெல்ஜியத்தில் பிரான்ஸ் எல்லைக் கல்லை ஏழரை அடி நகர்த்திவைத்த விவசாயி- பூதாகரமான எல்லை பிரச்னை..!

பெல்ஜியத்தில் விவசாயி ஒருவர் பிரான்ஸ் எல்லையை சுமார் ஏழரை அடி நகர்த்தியது சர்வதேச அளவில் பூதாகரமாகியுள்ளது.

1819 ஆம் ஆண்டு பெல்ஜியம் - பிரான்ஸ் இடையே எல்லையை பிரிக்கும்போது வைக்கப்பட்ட கல்லை 7.5 அடிக்கு விவசாயி நகர்த்தியதால் பிரான்ஸ் 1000 சதுர அடி நிலத்தை இழந்ததாக அந்த வழியே நடைபயிற்சி மேற்கொண்ட வரலாற்று ஆய்வாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சர்வதேச எல்லை மாறிப்போனதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வன அதிகாரி ஒருவர் விவகாரத்தை பெரிதுபடுத்தினார். இதனையறிந்த எர்குயிலின்னஸ் மாகாண மேயர் டேவிட், விவசாயி தவறுதலாக கல்லை இடம் மாற்றி வைத்துவிட்டதாகவும், அவரைக்கொண்டே அந்த கல் மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும் எனவும் பிரச்னையை சுமுகமாக தீர்த்துவைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments