ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

0 1316

கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் உள்ள ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பு ஆய்வகத்தை மேற்பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் மருந்து பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என தெரிவித்தார்.

அரசு நிர்ணயித்த விலையில்தான் மருந்துகள் விற்கப்படுகிறதா என்பதை கண்காணித்துவருவதாகவும், கள்ள சந்தையில் ரெம்டெசிவிர் விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments