ரெம்டெசிவிர் மருந்துக்காக.. அலைமோதும் மக்கள் கூட்டம்..!

0 4934
ரெம்டெசிவிர் மருந்துக்காக.. அலைமோதும் மக்கள் கூட்டம்..!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில், ரெம்டெசிவிர் மருந்தை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை பயன்படுத்தி மருந்துவாங்க வந்தவர்களிடம் சிலர் ஏமாற்றுவேலைகளிலும் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ரெம்டெசிவிர் மருந்து கிடைக்குமா... கிடைக்காதா... என்ற பரிதவிப்புடன் ஒருமணி நேரம் இரண்டு மணிநேரமில்லை இரண்டு நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் காத்துக்கிடக்கின்றனர் நோயாளிகளின் உறவுகள். எத்தனை நாட்களாயினும் மருந்துடனே திரும்பி செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களது முகத்தில் தெரிகிறது.

கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் விற்பனை செய்யப்பட்டுவரும் ரெம்டெசிவிர் மருந்தை சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கி செல்கின்றனர்.

கீழ்ப்பாக்கத்தில் மட்டும் விற்கப்பட்டுவரும் ரெம்டெசிவிர் மருந்தை, பல்வேறு மாவட்டங்களிலும் விற்பனை செய்தால் கூட்டம் குறைந்து, நோய் பரவும் அபாயம் குறையும் என்றும்,மருந்துக்கு டோக்கன் தருவதாக சிலர் ஏமாற்று வேலையில் ஈடுபடுவதாகவும் மருந்துவாங்க வந்த நோயாளிகளின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மருந்தை வாங்கித் தருவதாக ஒரு சில சமூக விரோத கும்பல், பலரிடம் பணத்தை பெற்று செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அங்கு பணியிலிருக்கும் காவலர்களிடம் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், ஒருசிலரை பிடித்து போலீசார் விசாரணை செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments