தமிழக அரசின் தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமனம்..!

0 12179
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த இறையன்பு, 1987ஆம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்வாகி, கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார்.

இதுமட்டுமின்றி பல்வேறு துறைகளின் செயலாளர், முதன்மை மற்றும் கூடுதல் செயலாளர் பதவியும் வகித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை பயிற்சி மைய நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த இறையன்பு, தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, உதயச்சந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் முதலமைச்சரின் தனிச் செயலர்களாக நியமிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments