திருச்சி பெல் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு முன்வராதது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

0 1553

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க முனைப்பு காட்டும் சூழலில், திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு முன் வராதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநலமனுவில், திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கவும், செங்கல்பட்டில் இயங்கிவரும் HLL பயோடெக் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள், திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள 3 கலன்களில் 140 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியுமா? என்றும், ஐசிஎம்ஆர் உதவியுடன் தனியார் நிறுவனங்கள் கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கும்போது மத்திய அரசு தடுப்பூசி தயாரிக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் கேள்வி எழுப்பி வழக்கை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments