கொரோனா நிவாரணப் பணிகளுக்கு விராட் கோலி ரூ.2 கோடி நிதியுதவி..! ரசிகர்கள் நிதியுதவி வழங்க விராட்கோலி-அனுஷ்கா தம்பதி வேண்டுகோள்

0 7730
கொரோனா நிவாரணப் பணிகளுக்கு விராட் கோலி ரூ.2 கோடி நிதியுதவி..! ரசிகர்கள் நிதியுதவி வழங்க விராட்கோலி-அனுஷ்கா தம்பதி வேண்டுகோள்

ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் கொரோனா நிவாரணப்பணிகளுக்காக 2 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளனர்‍.

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக கெட்டோ(Ketto) என்ற அமைப்புடன் இணைந்து நிதி திரட்டும் பிரச்சாரத்தை மனைவி அனுஷ்கா சர்மாவுடன், விராட் கோலி தொடங்கியுள்ளார்‍.

7 கோடி ரூபாய் நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ள இந்த தம்பதி, முதற்கட்டமாக 2 கோடி ரூபாயை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரசிகர்கள் தங்களால் இயன்றளவு நிதியுதவி வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்‍.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments