தமிழகத்தில் ஒரு நாளுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது..! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை தகவல்

0 3296
தமிழகத்தில் ஒரு நாளுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருப்பு உள்ளது..! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை தகவல்

மிழகத்தில் ஒரு நாளைக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் மட்டுமே கையிருப்பில் உள்ளதாகதாகவும், இக்கட்டான சூழல் நிலவுவதாகவும் சுகாதாரத்துறை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், தமிழகத்துக்கு தினமும் 475 டன் ஆக்சிஜன் தேவைப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், பாலக்காட்டில் உற்பத்தியாகும் 40 டன் ஆக்சிஜன் தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்குவது குறித்து ஒரு வாரத்தில் தெரியவரும் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்துக்கு தடையில்லாமல் ஆக்சிஜன் வழங்குவதை மத்திய அரசு இன்றைக்குள் உறுதி செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 12-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments