கணவருக்காக படுக்கை கோரி முதலமைச்சர் வீடு வரை சென்று போராடிய பெண்..! படுக்கை கிடைத்தும் பலன் இல்லாமல் பெண்ணின் கணவர் உயிரிழந்த சோகம்

0 3832
கணவருக்காக படுக்கை கோரி முதலமைச்சர் வீடு வரை சென்று போராடிய பெண்..! படுக்கை கிடைத்தும் பலன் இல்லாமல் பெண்ணின் கணவர் உயிரிழந்த சோகம்

ர்நாடகாவில் படுக்கை வசதி வேண்டி முதலமைச்சர் இல்லம் வரை சென்று போராடிய பெண்ணின் கணவருக்கு படுக்கை ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தனது கணவர் சதீஷ்க்கு அவசர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி ஏற்படுத்தி தரக்கோரி முதலமைச்சர் எடியூரப்பா இல்லம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.

10 மருத்துவமனைக்கு மேல் ஏறி இறங்கியும் படுக்கைகள் கிடைக்காததால் பல மணி நேரங்களாக ஆம்புலன்ஸில் சுற்றித்திரிந்ததாகவும் மஞ்சுளா தெரிவித்தார்.

தனி ஒரு ஆளாக மஞ்சுளா நடத்திய போராட்டத்தை அடுத்து முதல்வர் அலுவலகம் சதீஷ்க்கு படுக்கை வசதி ஏற்பாடு செய்துகொடுத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சதீஷ் உயிரிழந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments