புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு..!

0 3904
புதுச்சேரி முதலமைச்சராக என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி பதவியேற்பு

புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார்‍.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ரங்கசாமிக்கு தமிழில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி,தமிழக பாஜக தலைவர் எல் முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்‍. அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால் வேறொரு தேதியில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments