கோவாவில் 2 வாரங்களில் கொரோனா பரவலின் விகிதம் 41 சதவீதம் ஆக அதிகரிப்பு..!

0 1264

பிரபல சுற்றுலா தலமான கோவாவில் கடந்த 2 வாரங்களில் கொரோனா பரவலின் விகிதம் 41 சதவீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி வரை 26 சதவீதமாக இருந்த நோய்த்தொற்று சதவீதம் படிப்படியாக அதிகரித்து கடந்த மே 4 ஆம் தேதி நிலவரப்படி 41 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதேபோல் டெல்லியிலும் 19 சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. கோவா மற்றும் டெல்லிக்கு அடுத்தபடியாக மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் ஏறுமுகத்தில் உள்ளது. அங்கு 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இரு மடங்காகியுள்ளது.

இந்தியாவிலும் கடந்த 2 வாரங்களுக்கு முன் 15.3 சதவீதமாக இருந்த தொற்று பாதிப்பு விகிதம் 21.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் தொற்று விகிதம் கடந்த 15 நாட்களில் 2 சதவீதம் குறைந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments