முதல்வரானதும் முதல் கையெழுத்து... 5 தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றம்..!

0 22866
முதலமைச்சராக முதல் கையெழுத்திட்டார் மு.க.ஸ்டாலின்

குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக முதல்கட்டமாக 2ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.

சென்னை தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையைக் ஏற்றுக் கொண்டார்.

பின்னர், முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து தனது பணிகளை தொடங்கிய மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்ல் முதல் பணியாக, 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா 4ஆயிரம் ரூபாய் ஜூன் மாதம் வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் தவணையாக 2ஆயிரம் ரூபாயை மே மாதத்திலேயே சுமார் 2கோடியே 7லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார். இதற்காக சுமார் 4ஆயிரத்து153 கோடி ரூபாய் செல்விடப்படவுள்ளது.

வின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் வீதம் குறைத்து விற்பனை செய்வதற்கான அரசாணையிலும் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த விலை குறைப்பு நடவடிக்கை வருகிற 16ம் தேதி முதல் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண, நகர பேருந்துகளில் பெண்கள் நாளை முதல் இலவசமாக பயணம் மேற்கொள்வதற்கான கோப்புகளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, மக்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கவும், அந்த துறைக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தும் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

னியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கான கட்டணத்தை முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்பதற்கான அரசாணையிலும் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments